பதிவு செய்த நாள்
22
டிச
2016
12:12
திருப்பூர்: திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்த பெரு மான் கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். திருப்பூரில், பல நூறு ஆண்டுகள் பழமையான தும், பாடல் பெற்ற தலமாகவும், கொங்கணகிரி கந்த பெருமான் கோவில் உள்ளது. மரங்கள் நிறைந்த மலை மேல், கந்த பெருமான் எழுந்தருளி வருகிறார். பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு, 71 அடி உயரத்தில், ஐந்து நிலை கோபுரம் அமைக்க, 10 ஆண் டுக்கு முன் பணி துவங்கியது. பல்வேறு காரணங்களினால், ராஜகோபுரம் பணி பாதியில் நிற்கிறது. நீண்ட இழுபறிக்கு பின், ராஜகோபுரம் மற்றும் கோவிலை சுற்றிலும், ரத வீதிகள் தயார் செய்யும் பணிகள் துவங்கின; ஆனால், அப்பணிகளும் தொடர்ந்து ஆமை வேகத்தில் நடக்கிறது. திருப்பூர் நகரில் அமைந்துள்ள, சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் ராஜகோபுரம் உள்ளிட்ட திருப்பணிகளை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.