ராமேஸ்வரம்: முதல்வர் ஜெ., மரணமடைந்து 16ம் நாளான நேற்று அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டி இந்து மக்கள், சிவசேனை கட்சியினர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புரோகிதர்கள் மூலம் சங்கல்ப பூஜை செய்து நீராடினர். இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாநில சிவசேனை துணை தலைவர் புகழேந்தி போஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.