ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி, வேலநத்தம் செங்குந்தர் திருமண மண்டபத்தில், கம்பன் கழகம் சார்பில் மூன்றாம் ஆண்டு மார்கழி பெருவிழா கடந்த, 18ல் துவங்கியது. அன்று மாலை, 6:00 மணிக்கு கவி ஈர்ப்பு என்ற தலைப்பில், அப்துல் காதர் கவிதை சொற்பொழிவு நடத்தினார். நேற்று காலை, 10:00 மணிக்கு, அன்னையர் மூவர் என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ் பேசினார். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.