தென்கரை: சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் திருமூலநாதர்சுவாமி கோயிலில் அஷ்டமி சப்பர பவனி நடந்தது. இக்கோயிலில் நேற்று அம்மன், சுவாமிக்கு சிவாச்சாரியார் நாகராஜ் பல்வேறு அபிஷேகங்களை செய்தார். ரிஷப வாகனத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் மற்றொரு ரிஷப வாகனத்திலும், பஞ்சமூர்த்திகள் சப்பரத்திலும் ரதவீதியில் எழுந்தருளினர். இதுபோல் திருவேடகம் ஏலவார்குழலியம்மன், ஏடகநாதர்சுவாமி கோயிலில் அஷ்டமி சப்பரம் பவனி நடந்தது.