காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் கோவில் உண்டியில் அறநிலையத்துறை சார்பில் திறக்கப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மதனா தலைமையில் தக்கார் சீனுவாசன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் தோத்தாத்ரி, பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் சாமிநாதன் முகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. உண்டியல் காணிக்கையாக ஒரு லட்சத்து 72 ஆயிரம் 323 ரூபாய் ரொக்கம் இருந்தது. அதனை கோவில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.