பதிவு செய்த நாள்
26
டிச
2016
11:12
வடமதுரை: வடமதுரை -மீனாட்சிசுந்தரேசுவர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஐயப்பன் மணி மண்டபத்தில் மண்டல பூஜை விழா நடந்தது. இவ்விழாவிற்காக 37 சிவ வைணவ கோயில்களில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. பால்கேணி மேட்டில் இருந்து தீர்த்தகுடங்களில் ஒன்று யானை மீதும், மற்றவற்றை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஐயப்பன் மணி மண்டபத்தில் உலக நன்மை, மழை பெய்ய வேண்டி கணபதி ஹோமம், கஜ பூஜை, 108 சங்கு, 108 கலச அபிஷேகம் உள்பட சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கோயில் நிர்வாகிகள் காமராஜ், ராம்தாஸ், நந்தகுமார், பிரபு உள்பட ஐயப்ப பக்தர்கள் சேவை அறக்கட்டளையினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
எரியோடு: எரியோடு சித்துாரில் வீருதம்மாள், ஏரசிக்கம்மாள், வீருசிக்குபாட்டையா மாலைக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று 48ம் நாள் மண்டல பூஜை விழா நடந்தது. சிறப்பு வழிபாடும், அன்னதானம், கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. ஒக்கலிகர் ஆவுனவோர் குல தாயாதிகளும், உறவினர்களும் திரளாக பங்கேற்றனர்.