மழை வேண்டி வருண ஜபம்: தண்ணீரில் அமர்ந்து பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2016 11:12
கோவை : தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) சார்பில், மழை வேண்டி வருண ஜபம், கணபதி, பட்டிய கவுண்டர் செல்லம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. காலை, 8:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து தண்ணீர் நிரப்பப்பட்ட, 8 டிரம்களில் அமர்ந்து, ஒன்றரை மணி நேரம் ஜபம் செய்தனர். முடிவில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் கூறுகையில், இரு பருவமழையும் பொய்த்து போன நிலையில் மக்கள் நலனுக்காக இந்நிகழ்ச்சியை நடத்தியுள்ளோம். வருண ஜபம் செய்தால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை என்றனர். முன்னதாக, சங்க கணபதி கிளை தலைவர் சிரியதிருவடி தலைமை வகித்தார். மாநில ஆலோசகர் சேதுராமன், செயலாளர் ராஜா, மாவட்ட செயலர் சந்திரமவுலீஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.