பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள செல்வபுரத்தில் ஷீரடி சாய்பைரவர் கோவில் உள்ளது. புத்தாண்டு பிறப்பையொட்டி, இம்மாதம், 31 மாலை சிறப்பு பூஜைகள் தொடங்குகின்றன. இரவு, 9:00 மணிக்கு சஞ்சரித பாராயணமும், சாய்நாம அஷ்டோத்திரமும் நடக்கிறது. நள்ளிரவு, 12:15 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடக்கிறது. தொடர்ந்து, ஓம் சாய், ஸ்ரீ சாய் மந்திரங்களின் அடிப்படையில் சப்தயாகம் நடக்கிறது. நாள் முழுக்க அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு நாணயங்கள் வழங்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை ஷீரடி சாய்பைரவர் டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.