திருப்புத்துார்: திருப்புத்துார் மேலக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 7:--00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை நடந்தன.பின்னர் வெள்ளி அங்கி அணிந்து வடை மாலை சார்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு வெண்ணெய்காப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சி அளித்தார். ராஜகோபால் பட்டர் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. இரவுசர்வ அலங்காரத்தில் உற்சவர் திருவீதி வலம் வந்தார்.
தேவகோட்டை: தேவகோட்டை கோதண்டராமஸ்வாமிகோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஜெயவீர ஆஞ்சநேயருக்கு லட்சார்ச்சனை நடந்தது.நேற்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை,வடைமாலை சார்த்தி சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவில் சுவாமி கருடவாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ரங்கநாதர் பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்,பூஜைகள் நடந்தன. வடைமாலை சார்த்தி சிறப்பு ஆராதனை நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆதிசங்கரர் கோயிலில் பக்த ஆஞ்சநேயருக்கு லட்சார்ச்சனை நடந்தது.நேற்று காலை அபிஷேகம், அலங்காரம் பூஜை நடந்தது. மாலையில் 1008 வடைகளை கொண்ட மாலை ஆஞ்சநேயருக்கு சார்த்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.