பதிவு செய்த நாள்
31
டிச
2016
02:12
குமாரபாளையம்: குமாரபாளையம், சத்திய ஜோதி அய்யப்ப பக்தர்களின் சார்பில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. குமாரபாளையத்தில், அங்காளம்மன் கோவில் அருகே, அகில பாரத அய்யப்ப சேவா சங்கம், சத்திய ஜோதி அய்யப்ப பக்தர்களின், 108 திருவிளக்கு பூஜை, பொது பஜனை, சுவாமி திருவீதி உலா மற்றும் அன்னதான விழா நடந்தது. நாச்சிமுத்து குருசாமி தலைமை வகித்தார். காவிரி ஆற்றிலிருந்து, தீர்த்தக் குடங்கள் எடுத்து வரப்பட்டு, அய்யப்ப சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. சிறப்பு பஜனையில், பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், அய்யப்ப சுவாமி வீதி உலா, பிரதான வீதிகளின் வழியே நடந்தது.