ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் பகுதியில் பழமை வாய்ந்த கோவில்களில் உள்ள உண்டியல் பணம் எண்ணும் பணி நேற்று முடிந்தது.
விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவிலும், திருவரங்கம் கிராமத்தில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரங்கநாத பெருமாள் கோவிலும், அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. மத்திய அரசின் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து, இந்த இரண்டு கோவில்களிலும் உண்டியலில் உள்ள பணம் எண்ணும் பணி, இரு தினங்களுக்கு முன் துவங்கி, முடிவடைந்தது. கடந்த ஐந்து மாதங்களில் திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 500 ரூபாயும், அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் 58 ஆயிரத்து 318 ரூபாயும் காணிக்கையாக செலுத்தப் பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.