குலசேகரபட்டிணத்தில் 1008 பால்குட ஊர்வலம்: பக்தர்கள் பங்கேற்றனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2017 01:01
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணம் கோயிலில் பக்தர்கள் 1008 பால் குட ஊர்வலம் நடத்தினர். பின் அம்மனுக்கும், சுவாமிக்கும் பாலபிேஷகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். குலசேகரப்பட்டினத்தில் ஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மன் சமேதராக பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். நேற்று காலை 6 மணிக்கு மகா கணபதி ேஹாமம்,மகாலட்சுமி ேஹாமம்,தனபூஜை, கோ பூஜை, கஜபூஜை நடந்தது. பின் மகாேஹாமம் நடந்தது. 108 கலச பூஜை நடந்தது. கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. பின் அம்மனுக்கு சீர் வரிசை கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. பின் 1008 பால்குடம் எடுத்த பக்தர்கள் ஊர்வலம் நடந்தது. பின் சுவாமிக்கும், அம்மனுக்கும் பாலபிேஷகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.