சங்கராபுரம் கோவில்களில் புத்தாண்டு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2017 02:01
சங்கராபுரம்: புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.இதேபோல், சங்கராபுரம் பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகளும், சக்தி வினாயகர் கோவிலில் வினாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சந்தன காப்பு சாத்தபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.