திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் பகல்பத்து உற்சவத்தின் ஏழாம் நாளில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து முத்துவளைவு கொண்டை, வைரஅபயஹஸ்தம், வைர மாலை, முத்துமாலை, பவள மாலை, லெட்சுமி பதக்கம் உள்ளிட்ட அலங்காரத்தில் அர்ச்சனா மண்டபத்துக்கு எழுந்தருளினார்.
மார்கழி மாதம் 21 ம் நாளில் உள் ஆண்டாள் சன்னிதியில், ஏற்ற கலங்கள் காகாசுர சரணாகதி, என்ற திருப்பாவை பாசுரத்தின் படி அலங்காரத்தில் ஆண்டாள் எழுந்தளி கட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.