பதிவு செய்த நாள்
05
ஜன
2017
12:01
மதுரை, மதுரை ரமண கேந்திரம் சார்பில் ரமண மகரிஷியின் 137 வது ஜெயந்தி விழா தருமை ஆதீனம் மடத்தில் ஜன.,7 முதல் ஜன.,12 வரை நடக்கிறது. மதுரை ரமண கேந்திரம் செயலாளர் ஏ.கொண்டல்ராஜ் கூறியதாவது: துவக்க நாளான ஜன.,7ல் மாலை 6:00 மணிக்கு குற்றாலம் மாண்டிசரி பள்ளி மாணவர்களின் ரமண இன்னிசை, தயானந்த கல்லுாரி முன்னாள் முதல்வர் பிரணதார்த்திஹரனின் பக்தி சொற்பொழிவு. ஜன., 8ல் மாலை 6:00 மணிக்கு கலாராணி ரங்கசாமி ராமேஸ்வரி மாணவர்களின் ரமண நாட்டிய, நாடகம், ரமண வித்யா பீடம் நர்மதாவின் பக்தி சொற்பொழிவு. ஜன.,9ல் மாலை 6:30 மணிக்கு அனந்தகிருஷ்ணன் குழுவின் ரமண இன்னிசை, பேராசிரியை கலாராணி ரெங்கசாமியின் பக்தி சொற்பொழிவு. ஜன.,10ல் மாலை 6:30 மணிக்கு ஜெய ராஜாமணி மாணவ, மாணவியரின் ரமண இன்னிசை, சிதம்பர குற்றாலத்தின் பக்தி சொற்பொழிவு. ஜன.,12ல் காலை 6:00 மணிக்கு ஸ்ரீரமண மந்திரம், மார்கழி பாராயணம், வேத பாராயணம், அன்னதானம் நடக்கிறது, என்றார்.