பதிவு செய்த நாள்
05
ஜன
2017
12:01
நாமக்கல்: ’கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிக்கு, அரசு நிதி உதவி பெற தகுதியான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது’ என, நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை, பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு, தமிழக அரசால் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேல், சொந்த கட்டடத்தில் உள்ள, பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட, சீரமைப்பு பணிக்கு வெளி நாட்டில் இருந்து நிதி உதவி பெறாத தேவாலயங்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை, தீதீதீ.ஞஞிட்ஞஞிட்தீ@tண.ஞ்ணிதி.டிண என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனுடன், உரிய ஆவணங்களை இணைத்து, கலெக்டருக்கு, ஜன., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.