அன்னை காவிரியை வணங்கும் யாத்திரையில் பங்கேற்க அழைப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2011 10:10
ஊட்டி: பவானியில் நடக்கும் "அன்னை காவிரியை வணங்கிடுவோம் நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட பக்தர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட திருமுருக பக்தர்கள் பேரவை மாவட்ட பொருப்பாளர் குமாரசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:"அன்னை காவிரியை வணங்கிடுவோம் என்ற கொள்கை முழக்கத்துடன் தர்மபுரியை சேர்ந்த ராமாநந்த அடிகள், மைசூரை சேர்ந்த கணேஷ் சொரூபாநந்தா ஆகியோர் தலைமையில் அகில பாரத துறவியர் சங்கம் சார்பாக, காவிரி தீர்த்த யாத்திரை வரும் 23ம் தேதியன்று தலை காவிரியில் துவங்குகிறது. இந்த யாத்திரை வரும் நவம்பர் 11 தேதியன்று பூம்புகாரை சென்றடைய உள்ளது. வரும் நவ.,4ம் தேதி பவானியில் சங்கமேஸ்வரர் ஆலய வளாகத்தில் காலை 10.00 மணி முதல் கருத்தரங்கம் நடக்கிறது. இதில், சிரவை ஆதினம் குமரகுருபர அடிகளார், பேரூராதீன இளைய பட்டமும், ஊட்டி காந்தல் தட்சினாமூர்த்தி மடாலய மடாதிபதியுமான மருதாசல அடிகளாரும், செஞ்சேரிமலை திருநாவுக்கரசு நந்தவனத்தை முத்து சிவராமசாமி அடிகளார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சிவனடியார், முருக பக்தர்கள், இந்து அமைப்பினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.