பதிவு செய்த நாள்
06
ஜன
2017
11:01
சேலம்: சேலத்தில், சொர்க்கவாசல் திறப்பையொட்டி, பக்தர்களுக்கு வழங்க, 70 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யும் பணி நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், வரும், 8ல், வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான, சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. அதையொட்டி, சேலம், பட்டைக்கோவிலில், ஆண்டாள் திருப்பாவை நண்பர்கள் குழு சார்பில், தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழங்க, 50 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யும் பணி, அங்குள்ள மாருதி மண்டபத்தில் நடக்கிறது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று, லட்டு களை உருண்டை பிடித்து தருகின்றனர். மேலும், அக்குழு சார்பில், வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்தநாள், துவாதசி விருந்து நிகழ்ச்சி நடக்க உள்ளது. அன்று காலை, 6:00 மணி முதல், அறுசுவை விருந்து வழங்கப்படும். அதேபோல், அம்மாபேட்டை, சவுந்திரராஜபெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில், 20 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யும் பணி, கிருஷ்ணன் கோவில் தெரு, கலியன் ராமானுஜர் மண்டபத்தில், நேற்று காலை முதல் நடந்து வருகிறது.