பெரியவர்கள் நமக்கு ஆசி வழங்கும்பொழுது கட்டைவிரல், ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தித்தான் நமக்கு திலகமோ, விபூதியோ இடுவார்கள். கட்டைவிரலும், ஆள்காட்டி விரலும் சேரும்பொழுது ஜீவாத்மாவும், பரமாத்மாவும் இணைந்து, அங்கே அன்பு நிலை உண்டாகிறது. அன்பை எங்கும் நிறைந்திடச் செய்வதே ஆசிர்வாதத்தின் நோக்கம்!