கோட்டயம் எர்ணாகுளம் சாலையில் குருப்பந்தரா என்ற இடத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் மல்லியூர் உள்ளது. இங்கு மகாகணபதியின் மடியில் கிருஷ்ணர் குழந்தை வடிவில் அமர்ந்திருக்கிறார். எனவே இவரை வைணவ கணபதி எனவும் அழைக்கிறார்கள். இக்கணபதிக்கு தினசரி காலையில் 1000 குடம், மாலையில் 1000 குடம் தண்ணீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.