பதிவு செய்த நாள்
11
ஜன
2017
11:01
சபரிமலை: சபரிமலையில், மகர விளக்குக்கு முன்னோடி யாக, சுத்திகிரியை பூஜை கள் நாளை துவங்குகிறது.சபரிமலையில், 14ம் தேதி மகரஜோதி தரிசனம் நடக்க உள்ளது.
இன்னும், இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சபரிமலையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.நாளை திருவாபரணம், பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு
புறப்படுகிறது. மகரஜோதி நாளில் அய்யப்பனுக்கு நடைபெறும் முக்கிய பூஜை, மகர சங்கரம பூஜை. இதற்கு முன்னோடியாக, சுத்திகிரியைகள் நாளை துவங்குகின்றன.மகரவிளக்குக்கு அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3,000 போலீசார் சன்னிதானத்தில்
குவிக்கப்பட்டுள்ளனர். முதன் முறையாக சன்னிதானத்தில் சிறப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.சன்னிதானம் தவிர்த்து, ஜோதி தெரியும் பிற இடங்களை பட்டியலிட்டு, பக்தர்களை அங்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மகரஜோதி தரிசனத்துக்கு பின், திருவாபரணம் அணிந்த அய்யப்பனை வணங்க, பக்தர்கள் கூட்டம்
முண்டியடிக்கும். திருவாபரணம் வரும் நேரத்தில், சன்னிதான திருமுற்றத்தில் பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோதி தரிசனம் முடிந்ததும், பக்தர்களை விரைவாக ஊருக்கு அனுப்பி வைக்க, கேரள அரசு போக்குவரத்து கழகம், 1,000 பஸ்களை தயார் நிலையில் வைத்துள்ளன.