சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேரஸ்வரி அம்மன் கோவிலில், வைகுண்ட ஏகாசி உற்சவம் நடந்தது.
விழாவையொட்டி, அதிகாலை 5:35 சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக மூலவருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்து, ராமர் சீதாவை தங்க தேரில் எழுந்தருளச் செய்தனர். சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகளை கணேஷ்சர்மா செய்து வைத்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல் வரதராஜ பெருமாள் கோவில், கூகையூர் பெருமாள் கோவில், பைத்தந்துரை மற்றும் நாவுகுறிச்சி பெருமாள் கோவிலிலும் வைகுண்ட ஏகாசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.