பெருந்துறை: பழனி பாதயாத்திரை குழுவினரின் தீர்த்தக்குட ஊர்வலம், பெருந்துறையில் நடந்தது. பெருந்துறை சக்தி முருகன் பாதயாத்திரை குழு சார்பில், பவானி கூடுதுறையில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தீர்த்தக்குடங்கள், பெருந்துறை அண்ணாசிலை விநாயர் ஆலயத்தில் இருந்து, சென்னிமலை சாலையில் அமைந்துள்ள வேளாத்தம்பிரான் மடத்துக்கு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், அங்குள்ள ஈஸ்வர ஆலயத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.