பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், பிச்சாண்டவருக்கு லட்சார்ச்சனை மற்றும் சிவ ஹஷ்திர ஹோமம் நடந்தது. ஆருத்ரா தரிசன திருவெம்பாவை திருவிழா, சங்கமேஸ்வரர் கோவிலில் நடந்து வருகிறது. இதையொட்டி நாள்தோறும், மாலை, 6:00 மணியளவில் திருவெம்பாவை உற்சவம் நடந்தது. இந்நிலையில் சங்கமேஸ்வரர் கோவில் சன்னதி முன்பாக, பிச்சாண்டவர் உற்சவ மூர்த்திக்கு, லட்சார்ச்சனை மற்றும் சிவ ஹஷ்திர ஹோமம் நேற்று காலை நடந்தது. கோவில் அர்ச்சகர் பாலாஜி சிவம் தலைமையில், 12 பேர் இதில் ஈடுபட்டனர். ஆடி வெள்ளி குழுவினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.