பரமக்குடி, பரமக்குடியில் ஈஸ்வரன் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர், எமனேஸ்வரமுடையவர்,நயினார்கோவில் நாகநாதசுாமி கோயில்களில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. ஈஸ்வரன் கோயிலில் உற்சவர் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து அதிகாலை 5:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. நடராஜர் புஷ்பக விமானத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.