தாண்டிக்குடி, தாண்டிக்குடி மலைப்பகுதியில் திருவாதிரை விழா சிறப்பாக நடந்தது. தாண்டிக்குடி, ஆடலுார், பன்றிமலை, பூலத்துார், பாச்சலுார், பெரியூரில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த சுமங்கலிகள், தங்கள் வீடுகளிலேயே இரவு முழுமையும் நோன்பு இருப்பர். பின் களி உண்டு திருவாதிரை விரதத்தை கடைபிடித்தனர். பின், 16 வகை காய்கறியுடன் உணவு தயாரித்து அன்னதானம் செய்தனர். கணவர் நீண்ட ஆயுளுடன் மாங்கல்ய பலம் பெற வேண்டி தெய்வங்களுக்கு படையல் படைத்து புத்தாடை உடுத்தி பெரியோரிடம் ஆசி பெற்றனர்.