உடுமலை கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2017 12:01
உடுமலை: உடுமலை பகுதி கோவில்களில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசன்ன விநாயகர் கோவில் வளாகத்திலுள்ள, சிதம்பரேஸ்வரருக்கு ஆருத்ரா தரிசன விழா கடந்த 2 ம் தேதி துவங்கியது. நேற்றுமுன்தினம், சிவகாமி அம்பாளுடன், சிதம்பரேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு, ஆருத்ரா தரிசனம் நடந்தது. இத்தரிசனத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, சாமி திருவீதியுலா நிகழ்ச்சி நடந்தது. ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வரர் கோவில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.