பதிவு செய்த நாள்
16
ஜன
2017
02:01
புன்செய்புளியம்பட்டி: மாதேஸ்வரர் மலை கோவிலில், மண் உருவ சிலைகளை வைத்து, சிறப்பு வழிபாடு நடந்தது. புன்செய்புளியம்பட்டியை அடுத்த குட்டகம் கிராமத்தில், மாதேஸ்வரர் மலை கோவில் உள்ளது. புன்செய்புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், மாடுகளுக்கு நோய் ஏற்பட்டால், அவற்றின் மண் உருவ பொம்மை வைத்து, இக்கோவிலில் வழிபடுகின்றனர். இதனால், கால்நடைகளின் நோய் நீங்குவதாக நம்பிக்கை. மாட்டுப் பொங்கல் நாளில், வழிபாடு நடக்கிறது. அதன்படி நேற்று வழிபாடு நடத்தினர். அலங்காரம் செய்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட மாடுகளை, மாதேஸ்வரர் கோவில் முன் நிறுத்தி, கோ பூஜை செய்து வழிபட்டனர். விழாவையொட்டி மாதேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. புன்செய்புளியம்பட்டி மட்டுமின்றி திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.