ஆட்டையாம்பட்டி: அய்யப்பன் கோவில்களில், மகரவிளக்கு திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான, மகரஜோதி தரிசனம் தை மாத பிறப்பான நேற்று முன்தினம் மாலை நடந்தது. ஆட்டையாம்பட்டி, சேலம் சாலையில் அமைந்துள்ள ஓம்சக்தி விநாயகர் கோவிலில், அய்யப்பன் சிலைக்கு காலையில் நெய் அபிஷேகத்துடன், 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் மகரஜோதி தரிசனத்துக்காக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், அய்யப்பன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி, பேட்டை துள்ளலுடன் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், கோவில் கொடிமரத்துக்கு முன் கற்பூர ஜோதி வடிவில் அய்யப்பன் தரிசனம் அளித்தார்.