க.பரமத்தி: க.பரமத்தி ஒன்றியம், எலவனூரில் முருகன் கோவில் தை மாத பிறப்பை முன்னிட்டு சப்பரத் திருவிழா நடந்தது. இங்கு, மார்கழி மாதம் முழுவதும் தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நாள்தோறும் சுவாமி பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, தை மாதம் முதல் நாளில் முருகன் திருவீதி உலா வந்தார். இங்கு, முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, சப்பரத்தில் வைத்து வீதி உலா சென்றார். இதில், சுற்றுவட்டாரப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.