பதிவு செய்த நாள்
16
ஜன
2017
02:01
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த துத்திக்குளத்தில், புனித வனத்து அந்தோணியார், புனித வனத்து சின்னப்பர் ஆலய தேர்த்திருவிழா முன்னிட்டு, நாளை (ஜன., 17) மாலை, 6:00 மணிக்கு, மறை மாவட்ட முதன்மை குழு பிரான்சிஸ் தலைமையில், கொடியேற்றம், கொடி பவனி, நவநாள் ஜெபம், திருப்பபலி நடக்கிறது. வரும், 18, மாலை, 6:00 மணிக்கு, சேலம் மறை மாவட்ட பொருளாளர் எட்வர்ட் ராஜன் தலைமையில், புனித வனத்து அந்தோணியார் பெருவிழா, நவநாள் ஜெபம், பொங்கல், வேண்டுதல் தேர், தேர்பவனி, திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து, 19ல், மாலை, 6:00 மணிக்கு, புனித வனத்து சின்னப்பர் பெருவிழா, நவநாள் ஜெபம், திருப்பலி, கொடி இறக்கம், இறை ஆசீர் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, பங்குத்தந்தை, பங்கு மக்கள் செய்துள்ளனர்.