Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காணும் பொங்கலை முன்னிட்டு ... தஞ்சையில் பொங்கல் கொண்டாடிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் மாளிகைப்புறம் எழுந்தருளல் படிபூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2017
01:01

சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்கு விழா நிறைவு பெற்ற நிலையில் தினமும் மாளிகைப்புறத்தம்மன் சன்னிதானம் முன்பு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சபரிமலையில் நேற்று முன்தினம் மகரவிளக்கு விழா நிறைவு பெற்றது. எனினும் வரும் 19-ம் தேதி வரை பூஜைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. தினமும் இரவு 9 .30 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் சன்னிதானம் முன்பு எழுந்தருளுகிறார். மாளிகைப்புறத்தம்மன், ஐயப்பனை திருமணம் செய்வதற்கான வேண்டுதலுடன் செல்வதாக ஐதீகம். 17-ம் தேதி வரை இந்த பவனி நடைபெறுகிறது.

கன்னி ஐயப்பன் சபரிமலைக்கு வராத ஆண்டில் திருமணம் செய்வதாக ஐயப்பன் கூறியதன் பேரில், 18-ம் தேதி சரங்குத்திக்கு மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளுவார். அங்கு கன்னி ஐயப்ப பக்தர்கள் வந்ததன் அடையாளமாக மலை போல் குவிந்துள்ள சரக்கோலை கண்டு ஆரவாரம் இல்லாமல் கோயிலுக்கு திரும்புவார். கடந்த ஆண்டு இந்த பவனிக்காக வந்த யானை தாக்கி ஒரு பெண் பக்தர் இறந்ததால், மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் யானைகளை பயன்படுத்த கேரள ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு மாளிகைப்புறத்தம்மன் விக்ரகத்தை பூஜாரிகள் சுமந்து வந்தனர். இன்று முதல் 19-ம் தேதி வரை படிபூஜை நடைபெறும். மாலையில் தீபாராதனைக்கு பின்னர் இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் இந்த பூஜை நடைபெறும். வரும் 18-ம் தேதி காலை 10 மணியுடன் நெய்யபிஷேகம் நிறைவு பெறும். 19-ம் தேதி இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு தரிசன வசதி உண்டு. அன்று இரவு மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதி பூஜை நடைபெறும். 20-ம் தேதி காலை 7 மணிக்கு நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புட்குழி: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மாசி பிரம்மோத்சவத்தின் ஏழாவது நாளான இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
 புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புவனகிரியில், ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar