திண்டிவனம் : தீவனூர் பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனூரில் உள்ள ஆதிநாராயணப் பெருமாள் என்கிற லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடந்தது. நான்காவது சனிக்கிழமை விழாவையொட்டி மூலவருக்கு மாகா அபிஷேகமும், மலர் அலங்காரத்தில் தீபாராதனையும் நடந்தது. மாலை 7 மணிக்கு உற்சவர் வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து லக்ஷ்மி நாராயணன் பஜனை கோஷ்டியினருடன் பக்தி பாடல்களுடன், சுவாமி வீதியுலா நடந்தது. பூஜைகளை ராமானுஜதாசர் செய்தார். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.