ஊட்டி : ஊட்டி அருகே எம்.பாலாடா கீழ்அப்புக்கோடு ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை நடந்தது. காலை 10.00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 10.30 மணிக்கு நன்மணி லட்சுமணன், லதா குழுவினரின் பஜனை, ராமகிருஷ்ணனின் அருளுரை, ஆசிரியர் பெள்ளன் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இத்தலார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அபிமன்யூ, மேற்குநாடு சீமை சின்னகணிகே போஜன், இயற்கை உலக அறக்கட்டளை தலைவர் சந்திரன், சண்முகம் உட்பட பலர் பங்கேற்று பேசினர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.