Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சபரிமலை மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவு : சபரிமலை நடை அடைப்பு சபரிமலை மண்டல, மகரவிளக்கு காலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ணர் ஆடிய ஜல்லிக்கட்டு: ஏழு காளைகளை அடக்கி நீளாதேவியை மணந்தார்!
எழுத்தின் அளவு:
கிருஷ்ணர் ஆடிய ஜல்லிக்கட்டு: ஏழு காளைகளை அடக்கி நீளாதேவியை மணந்தார்!

பதிவு செய்த நாள்

21 ஜன
2017
10:01

கிருஷ்ணர், ஏழு காளைகளை வீரமாக அடக்கி நப்பின்னை என்ற நீளாதேவியை மணந்தார் என்பது, நம்மாழ்வாரின் திருவாய் மொழியிலிருந்து நமக்குப் புலப்படுகிறது.கிருஷ்ணனின் வளர்ப்புத் தாய் யசோதையின் சகோதரர் கும்பனின் மகள், நப்பின்னையாக அவதரித்தார். ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய மூவரும், மகா விஷ்ணுவின் மனைவியர். வராக அவதாரத்தில் பூதேவியும், ராமாவதாரத்தில் ஸ்ரீதேவியும், கிருஷ்ணாவதாரத்தில் நீளாதேவியும் அவதரித்தனர்.

தேனினுமினிய நம்மாழ்வாரின் திருவாய்மொழியில், கிருஷ்ணர் ஆடிய ஜல்லிக்கட்டிற்கு சான்றாக அமைந்து இருக்கும் பாசுரம் இது தான்: தோளிசேர் பின்னை பொருட்டு எருதேழ் தழீஇக்கோளியார் கோவலனார் குடக் கூத்தனார் தாளினை மேலணி தண்ணனந் துழாயென்றே நாளுநாள் நைகின்றதால் என்தன் மாதரே!இப்பாடலில், எருதேழ் தழீஇக் கோளியர் என்ற தொடர், ஏழு எருதுகளை வீரமாக அடக்கியவர் என்பது, கிருஷ்ணரை குறிப்பிடுகிறது. துவாபர யுகத்திலேயே, எருதுகளை அடக்கி வீரத்தை வெளிப்படுத்துவது வழக்கத்திலிருந்தது என்பது, இதிலிருந்து தெரிய வருகிறது.

நம்மாழ்வார் : நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிய, 12 ஆழ்வார்களில், முக்கியமானவராக கருதப்படுபவர், நம்மாழ்வார். பிறந்தது முதல், வாய் பேச முடியாமல் இருந்த நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரால் ஆட்கொள்ளப்பட்டு, பல பாசுரங்களை பாடினார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், 1,352 பாசுரங்கள், நம்மாழ்வாரால் இயற்றப்பட்டவை. ஸ்ரீரங்கத்தில் அரவையர் சேவை, நம்மாழ்வாரை சிறப்பித்து செய்யப்படுகிறது.

நாலாயிர திவ்ய பிரபந்தம் : மகா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை எடுத்துரைக்கும், 4,000 தமிழ் பாசுரங்களைக் கொண்ட நாலாயிர திவ்ய பிரபந்தம், 12 ஆழ்வார்களால் பாடப்பட்டு, நாதமுனி என்பவரால், 9-ம் நுாற்றாண்டில் தொகுக்கப்பட்டது. வி.வி.சுப்ரமணியம்மேலாண் இயக்குனர், ஏ.எம்.ஏ., வேதிக் சர்வீசஸ் (பி) லிட்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar