Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னியம்மனுக்கு சிறப்பு உற்சவம் திருக்கழுக்குன்றம் பக்தவச்சலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா திருக்கழுக்குன்றம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லவ கால பழுதடைந்த மண்டபம் ஆய்வு செய்த தொல்லியல் துறை
எழுத்தின் அளவு:
பல்லவ கால பழுதடைந்த மண்டபம் ஆய்வு செய்த தொல்லியல் துறை

பதிவு செய்த நாள்

27 ஜன
2017
11:01

திருத்தணி: ‘தினமலர்’ நாளிதழில் வெளியான செய்தியால், தொல்லியல் துறை ஆய்வாளர் பழுதடைந்த பல்லவத்து கால மண்டபத்தை நேரில் வந்து ஆய்வு செய்தார். திருத்தணி ஒன்றியம், அகூர் ஊராட்சிக்குட்பட்ட நத்தம் கிராமத்தில், பல்லவ கால வழிபோக்கர் மண்டபம் பராமரிப்பின்றி பழுதடைந்து கிடந்தது. மேலும், அந்த மண்டபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆடு,மாடுகள் கட்டி வைத்து மாட்டுத்தொழுவாக பயன்படுத்தி வந்தனர். இது குறித்து வெளியான செய்தியையடுத்து, தமிழக தொல்லியல் துறை கல்வெட்டு ஆய்வாளர் பி.ஜி.லோகநாதன், நத்தம் கிராமத்திற்கு சென்று பழுதடைந்த மண்டபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது,அவர் கூறியதாவது: வழிப்போக்கர் மண்டபம் என்பது நெடுஞ்சாலைகளை ஒட்டிய பகுதியில் அமைக்கப்படும். வணிக ரீதியாகவோ,கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கியிருந்து செல்வதற்கு அமைக்கப்படும்.அந்த வகையில், நத்தம் கிராமத்தில், 10 ஏக்கர் பரப்பளவில், கி.பி., 14ம் நுாற்றாண்டில் மண்டபம் ஏற்படுத்தப்பட்டது. இந்த மண்டபத்தில் பயணத்தின்களைப் பினை போக்கவும், தமது உடமைகளையே அல்லது சுமைகளை இறக்கி வைக்கும் இடமாக இருந்துள்ளது. மேலும், திருத்தணி முருகன் கோவிலுக்கு காவடிகள் எடுத்து வரும் பக்தர்கள் இந்த மண்டபத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கியிருந்து, குளத்தில் புனித நீராடி சென்றாக இப்பகுதிவாசிகள் கூறியுள்ளன. தற்போது, பழுதடைந்த இந்த மண்டபத்தை ஆய்வு செய்தேன். இந்த ஆய்வறிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். மேலும், பழுதடைந்த வழிப்போக்கர் மண்டபத்தை சீரமைப்பதற்குவிரை வில் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய தொன்மை வாய்ந்த மண்டபங்களை புனரமைத்து பாதுகாக்கவும் பொதுமக்களும் முன்வந்தால், பல ஆண்டுகள் இந்த மண்டபங்கள் நிலைத்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar