பழநி:பழநி பகுதியில் மழைபெய்ய வேண்டி மீனவர்கள் சார்பில் பாலாறு கருப்பணசாமி கோயிலில் கிடாவெட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. பழநிபகுதியில் இரண்டு ஆண்டுகளாக மழை இல்லை. இதனால் விவசாயம், குடிநீர் ஆதாரமான பாலாறு-பொருந்தலாறு அணை, வரதமாநதி, குதிரையாறு அணையும் தண்ணீரின்றி வறண்டுள்ளது. நுாற்றுக்குமேற்ப்பட்ட குளங்களும் காய்ந்து விட்டன. பலஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. 300 ஆண்டுகள் இல்லாத கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர். பாலாறு -பொருந்தாறு அணையில் மீன்பிடிக்கும் மீனவர்கள், குத்தகை தாரர்கள், மீன்வியாபாரிகள் இணைந்து மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பாலாறு அணை அருகேயுள்ள அனைத்தான்பாறை கருப்பணசுவாமி கோயிலில் மூன்று கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.