Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்க நகரில் ஒரு தங்கக்கோயில் நமசிவாய மூர்த்திகள் குருபூஜை: எழுத்தாளருக்கு விருது நமசிவாய மூர்த்திகள் குருபூஜை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் ஊஞ்சல் உற்சவம்: கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் ஊஞ்சல் உற்சவம்: கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

28 ஜன
2017
11:01

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு தை அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்க கவச அலங்காரம் செய்தனர். இரவு 11.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளியதும், கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரதீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முனைவர் வீர சண்முகமணி கலந்து கொண்டார்.

உதவி ஆணையர்கள் மேல்மலையனுார் பிரகாஷ், திருவண்ணாமலை மோகன் அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, மற்றும் அறங்காவலர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர். செஞ்சி டி. எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை செய்தனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் நேற்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தொடர் மழை பொழிந்தது. மேல்மலையனுாரிலும் பிற்பகலில் இருந்து தொடர்ந்து மழை கொட்டியது. இரவு 9 மணிக்கு பிறகே மழை நின்றது. கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் வழக்கம் போல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar