நமசிவாய மூர்த்திகள் குருபூஜை: எழுத்தாளருக்கு விருது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2017 11:01
திருவாவடுதுறை: திருவாவடுதுறை ஆதீன குருமுதல்வர் நமசிவாயமூர்த்திகள் மகரத் தலைநாள் (தை அசுவதி) குருபூஜை விழாவில் ஆன்மிக எழுத்தாளருக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழா ஜன. 25ல் துவங்கியது. பத்து நாள் நடக்கும் விழாவில், பிப். 3ல் குருபூஜையும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கிறது. முதல்நாள் விழாவில், ஆன்மிக எழுத்தாளர் பி. சுவாமிநாதனுக்கு ‘செந்தமிழ் கலாநிதி’ விருதை ஆதீனத்தின் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வழங்கினார். பொற்கிழி ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்பட்டது.