பதிவு செய்த நாள்
28
ஜன
2017
01:01
நகரி: காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவில் உண்டியலில், பக்தர்கள், 28 நாட்களில், 1.01 கோடி ரூபாய் ரொக்கம், 356 கிலோ வெள்ளி காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சித்துார் மாவட்டம், காளஹஸ்தி, ஞானபிரசுன்னா சமேத வாயுலிங்கேஸ்வர் சுவாமி கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். கடந்த, 28 நாட்களில், பக்தர்கள் உண்டியலில் அளித்த காணிக்கையை, கோவில் அதிகாரி பிரம்மராம்பா முன்னிலையில், கோவில் ஊழியர்கள் பிரித்து எண்ணினர். இதில், 1,01,60,194 ரூபாய் ரொக்கம், 356 கிலோ வெள்ளி, 142 வெளிநாட்டு கரன்சி ஆகியவை இருந்தன.