ப.வேலூர்: ப.வேலூர், சுல்தான்பேட்டை பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்து, ஓராண்டாவதால், ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, விநாயகர் வழிபாடு, புண்யாகம், கணபதி ஹோமம், காவிரியில் புனிதநீர் எடுத்து வருதல், அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சுல்தான்பேட்டை விநாயகர் ஆலய தர்மகர்த்தா, விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.