பதிவு செய்த நாள்
30
ஜன
2017
02:01
ராசிபுரம்: பொன்மலையில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில், வரும், 2ல் கும்பாபி ?ஷக விழா கோலாகலமாக நடக்கிறது. ராசிபுரம் அடுத்த, பட்டணம் பேரூராட்சி, பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பொன்மலையில், புதிதாக பொன் வரதராசப் பெருமாள், அகிலாண்டேஸ்வரி, பொன்னேஸ்வரர், 27 நட்சத்திர விருட்ச அதிதேவதைகள் கோவில் கட்டப்பட்டது. தொடர்ந்து, கும்பாபிஷேக பெருவிழா, வரும் பிப்., 2ல், நடக்கிறது. முன்தாக, 31ல், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், தீர்த்தக்குடம் புறப்படுதல், முதல் கால யாக பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜைகள், மூன்றாம் கால பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடக்கும். வரும், 2ல், காலை, 9:00 மணிக்கு, கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.