ராமநாதபுரம்: தென் கயிலை பக்தி பேரவை இயக்கம் சார்பில்,112 அடி உயரத்தில் உலகின் மிகப்பெரிய சிவன் சிலை அமைக்கப்படுகிறது. இந்த திருவுருவ சிலையானது கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி நாளான பிப்.,24ல் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதையடுத்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலையின் மாதிரி அமைப்பான, சிவன் முகம் அமைக்கப்பட்ட ஆதியோகி சிவன் ரதம் ஊர்வலம் தமிழகம் முழுவதும் நடக்கிறது. நேற்று ராமநாதபுரம் வந்த சிவன் ரதத்திற்கு அரண்மனை சிவன் கோயில், அரண்மனை, வெளிப்பட்டிணம் சிவன் கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.