பதிவு செய்த நாள்
31
ஜன
2017
12:01
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், தினமும் மதியம், 300 பக்தர்களுக்கு வழங்கும் அன்னதான திட்டத்தில், 500 நபர்களாக விரிவு படுத்த, கோவில் நிர்வாகம், ஆணையரிடம் அனுமதி கோரியுள்ளது. திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவர் முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர். பக்தர்களுக்கு மலைக்கோவிலில் தினமும், மதியம், 12:30 மணிக்கு, 300 பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த, 2011 ஜூலை, 2ல், முருகன் கோவிலில் அன்னதான திட்டம் துவங்கப்பட்டது. அன்று முதல், இன்று வரை, அதே, 300 பக்தர்களுக்கு மட்டுமே அன்னதானம் வழங்கப்படுகிறது. தற்போது, மதிய நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை தரிசிக்கின்றனர். இவர்கள், கோவில் அன்னதான திட்டத்தில், மதிய அன்ன தானத்திற்கு வரிசையில் நிற்கின்றனர். ஆனால், கோவில் நிர்வாகம், முதல் நிற்கும், 300 பேருக்கு மட்டும், அன்னதான டோக்கன் வழங்கி விட்டு, மீதமுள்ள பக்தர்களை திருப்பி அனுப்புகின்றனர்.
இதே, பழநி முருகன் கோவிலில், காலை, 11:00 மணி முதல் மாலை, 3:30 மணி வரை, தொடர்ந்து பக்தர்களுக்கு கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஆகையால், திருத்தணி முருகன் கோவிலில், 300 பக்தர்களில் இருந்து, 1,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து, திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவிலில், தற்போது, 300 நபர்களுக்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது. இதை, 500 பக்தர்களுக்கு உயர்த்த வேண்டும் என, இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு, பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளோம். ஆணையரின் அனுமதி கிடைத்தவுடன், அன்னதான திட்டத்தை விரிவுபடுத்தி, நபர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்றார். கோவில் அன்னதான திட்டத்தில், மதிய அன்ன தானத்திற்கு வரிசையில் நிற்கின்றனர். தற்போது, 300 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதை, 500 பக்தர்களுக்கு உயர்த்த வேண்டும்.