Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 4ல் ... செங்கழுநீர் அம்மன் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலுார் சத்திய ஞான சபையில் 9ம் தேதி தைப்பூச ஜோதி தரிசனம்
எழுத்தின் அளவு:
வடலுார் சத்திய ஞான சபையில் 9ம் தேதி தைப்பூச ஜோதி தரிசனம்

பதிவு செய்த நாள்

01 பிப்
2017
12:02

வடலுார்: வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 146வது தைப்பூச ஜோதி தரிசன விழா வரும் 9ம் தேதி நடக்கிறது.  விழாவை முன்னிட்டு இன்று (1ம் தேதி) முதல் 3ம் தேதி வரை தரும சாலையில் மகாமந்திரம் ஓதுதல். 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஞான சபையில் திருஅருட்பா முற்றோதல் நடைபெறும். 8ம் தேதி காலை 5:00 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவற் பாராயணம், காலை 7:30 மணிக்கு தரும சாலை, வள்ளலார் பிறந்த மருதுார், வள்ளலார் தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி ஆகிய இடங்களில் சன்மார்க்கக் கொடியேற்றுதல் நடைபெறும். காலை 10:00 மணிக்கு பார்வதிபுரம் கிராம வாசிகள் சார்பில் ஞானசபையில் சன்மார்க்கக் கொடியேற்றம், இரவு 7:00 மணிக்கு திருஅருட்பா கருத்தரங்கம் நடைபெறும்.  9ம் தேதி முக்கிய நிகழ்வான தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

அன்று காலை 6:00 மணி, 10:00, மதியம் 1:00, இரவு 7:00; 10:00 மணி மற்றும் 10ம் தேதி காலை 5:30 மணிக்கு என ஆறு காலங்கள் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.  காலை 11:00 மணிக்கு தரும சாலை பிரசங்க மேடையில் சன்மார்க்கக் கருத்தரங்கம் நடைபெறும். அதைத்தொடர்ந்து பிப்வரி 11ம் தேதி வள்ளலார் சித்தி பெற்ற சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம் நடைபெறும். அன்று காலை 10:00 மணிக்கு வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழை ஆலங்கரிக்கப்பட்டு வள்ளலார் நடந்து சென்ற பாதை வழியாக மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் எடுத்துச் சென்று அங்கு வள்ளலார் சித்தி பெற்ற அறை முன் வைத்து மதியம் 12:00 மணிக்கு திருஅறை திறக்கப்பட்டு மாலை 6:00 மணி வரை திருஅறை தரிசனம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பார்வதிபுரம் கிராம வாசிகள், இந்து அறநிலையத்துறை அதிகாரி செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar