பதிவு செய்த நாள்
01
பிப்
2017
12:02
கொடுமுடி: புதுமாரியம்மன் கோவிலில், குண்டம் இறங்கும் விழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள, புது மாரியம்மன் கோவில் திருவிழாவில், முக்கிய வைபவமான தீ மிதி விழா நேற்று நடந்தது. இதற்காக, 60 அடி குண்டம் அமைக்கப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு தொடங்கி, 6:00 மணி வரை நடந்த விழாவில், ஆண், பெண், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை மதியம் (2ம் தேதி) பால்குட தீர்த்த ஊர்வலம், அன்னதானம் நடக்கிறது. இரவு, 10:00 மணிக்கு பிரம் மாண்ட வாணவேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. பிப்.,3ல் மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவு பெறுகிறது.