குன்னுார் : குன்னுார் புனித செபாஸ்தியார் தேவாலய திருவிழா நிறைவு பெற்றது. குன்னுாரில் உள்ள புனித செபாஸ்தியார் தேவாலயத்தின் திருவிழா, கடந்த, 20ம் தேதி துவங்கி நடந்து வந்தது. தொடர்ந்து, புனித அம்பு திருநாள் விழா, சிறப்பு திருப்பலி நடந்தது. முக்கிய திருவிழா நாளில், குன்னுார் புனித அந்தோணியார் தேவாலய பங்கு தந்தை ஸ்டீபன் லாசர் தலைமையில் தமிழில் பாடல் திருப்பலி நடந்தது. தொடர்ந்து தேவாலயத்தில் துவங்கிய ஊர்வலம் மவுன்ட்ரோடு, பஸ் ஸ்டாண்ட் வழியாக, மீண்டும் தேவாலயத்தை சென்றடைந்தது. இதில், குன்னுார் பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார மேடையில் செபாஸ்தியருக்கு ஆசிர்வாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வாத்திய இசை, செண்டை மேளம் முழங்க ஊர்வலத்தில் அலங்கார பவனியில் செபஸ்தியார் வலம் வந்தார். திவ்ய நற்கருணை ஆசிர்வாதத்துடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜிஜோ வாத்தேலில் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.