பதிவு செய்த நாள்
02
பிப்
2017
12:02
தர்மபுரி: நல்லம்பள்ளி தாலுகாவில் உள்ள எர்ரப்பட்டி பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி அருகே, நல்லம்பள்ளி தாலுகா, ஏ.ஜெட்டிஅள்ளி பஞ்.,க்கு உட்பட்ட எர்ரப்பட்டியில் பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உட்பட பல்வேறு அலங்கார பூஜை நடந்தது. இரவு, 10:00 மணிக்கு, கோபுரத்தில் கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று காலை, 6:00 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடந்தது. மாலை, 3:00 மணிக்கு மேல், திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, பழனி ஆண்டவருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.