பதிவு செய்த நாள்
02
பிப்
2017
12:02
செம்பாக்கம்: செம்பாக்கத்தில், செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. செம்பாக்கம், ராஜகீழ்ப்பாக்கம், சத்ய சாய் நகர், முதல் பிரதான சாலையில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இங்கு, அபிராமி அம்மை உடனுறை அமிர்தகடேஸ்வரர், வள்ளி - தேவயானை சமேத சுப்ரமண்ய சுவாமி, லக் ஷ்மணர், சதாதேவி சமேத ராமர், ஆஞ்சனேயர், விஷ்ணு, பிரம்மா, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, அய்யப்பன், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், நவகிரக நாயகர்கள் மற்றும், ஷீரடி சாய் பாபா ஆகிய பரிவார தெய்வங்களும், ஆகம விதிப்படி அமைந்து உள்ளன. கடந்த, 30ம் தேதி அன்று, கணபதி, நவக்ரஹ, லஷ்மி ஹோமங்கள், கோ பூஜைகள், முதல் கால விக்னேஸ்வர பூஜை, மஹா பூர்ணாஹூதி தீபாராதனையும், நேற்று முன்தினம், இரண்டாம் காலம், விசேஷ சாந்தி, மூன்றாம் கால யாகசாலை, லஷ்மி, தீப, வடுக, கன்யா, சுவாஸினி, தம்பதி பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை, நான்காம் கால பூஜையுடன், 10:30 மணி முதல், கும்பங்கள், கலசங்கள் புறப்பாடு; ராஜகோபுரம், விமான சமகால மகா கும்பாபிஷேகமும், மாலை, சுவாமி புறப்பாடும் நடை பெற்றது. மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, ஆலயத்தில், 48 நாட்களுக்கு மண்டல அபிஷேகம் நடைபெறுகிறது.