திருவந்திபுரத்தில் காணிக்கை முடி ரூ.57 லட்சுத்திற்கு ஏலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2011 12:10
கடலூர் : திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி மாதத்தில் 50 ஆயிரம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் இந்தாண்டு புரட்டாசி மாதம் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கடந்த புரட்டாசி மாதத்தில் மட்டும் 50 ஆயிரம் பேர் முடி காணிக்கை செலுத்தினர். இதன் மூலம் 5 லட்சம் ரூபாய் மற்றும் அர்ச்சனை சீட்டு மூலம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.கடந்தாண்டை போல் உண்டியல் வசூல் 10 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் இந்தாண்டு ஜூலை வரை பக்தர்கள் öசுலுத்திய காணிக்கை முடி 57 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் திருமணம் செய்வதில் பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.கடந்த இரண்டு மாதங்களில் 750க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததன் மூலம் 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைத்துள்ளது. தற்போது கோவிலில் திருப்பணி நடந்து வருகிறது. திருப்பணி ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன், நரசிம்மன் பட்டாச்சாரியார் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.